பெண்கள் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்.? பெங்களூரு-டெல்லி அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெண்கள் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்.? பெங்களூரு-டெல்லி அணிகள் இன்று மோதல்
Published on

வதோதரா,

5 அணிகள் இடையிலான 4-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை விரட்டியடித்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 4-வது இடமும், உ.பி.வாரியர்ஸ் கடைசி இடமும் பெற்று லீக் சுற்றோடு நடையை கட்டின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கின்றன. சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 2-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தும் முனைப்புடன் தயாராகிறது. அதே சமயம் முதல் 3 சீசனில் தொடர்ந்து இறுதி ஆட்டங்களில் தோல்வியை தழுவிய டெல்லி அணி அந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்முறையாக கோப்பையை வெல்ல வரிந்துகட்டுகிறது. மேலும் கடந்த 3 சீசன்களில் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் வெற்றி பெற்ற அணியே கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. அந்த ராசி இந்த தடவை டெல்லிக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Also Read
பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி நியமனம்...!
பெண்கள் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்.? பெங்களூரு-டெல்லி அணிகள் இன்று மோதல்

நடப்பு சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கின்றன. சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 2-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தும் முனைப்புடன் தயாராகிறது. அதே சமயம் முதல் 3 சீசனில் தொடர்ந்து இறுதி ஆட்டங்களில் தோல்வியை தழுவிய டெல்லி அணி அந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்முறையாக கோப்பையை வெல்ல வரிந்துகட்டுகிறது. மேலும் கடந்த 3 சீசன்களில் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் வெற்றி பெற்ற அணியே கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. அந்த ராசி இந்த தடவை டெல்லிக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com