டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி
Published on

கொழும்பு,

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொழும்புவில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் ஓமன் - ஜிம்பாப்வே அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஓமன் 19.5 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை தொடர்ந்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 13.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 106 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஓமனை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com