ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி குறித்து ஜிம்பாப்வே கேப்டன் கருத்து

அடுத்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கப் போகிறது என சிக்கந்தர் ராசா கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி குறித்து ஜிம்பாப்வே கேப்டன் கருத்து
Published on

கொழும்பு,

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி அடுத்து அயர்லாந்து, இலங்கை அணிகளுடன் மோத உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றி குறித்தும், அடுத்து வரும் போட்டிகள் குறித்தும் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா கூறியதாவது;

“ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது விளையாட்டின் ஒரு பகுதி. எனினும், அடுத்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் எங்களுக்கு தெரியும். நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கப் போகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியில் ஒன்றுமே இல்லை. எல்லோரும் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். நேற்று போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தோம். ஓய்வு எடுத்தோம். இன்று நன்றாக பயிற்சி மேற்கொண்டோம். இது மிகவும் முக்கியமான போட்டி.”

இவ்வாறு சிகந்தர் ரசா கூறினார். ஜிம்பாப்வே அணி, நாளை அயர்லாந்து அணியுடனும், அதன்பின் 19-ந்தேதி இலங்கையையும் எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com