தேசிய அளவிலான ஆக்கி போட்டிகள் இனி கோவையிலும் நடைபெறும்: உதயநிதி ஸ்டாலின்


தேசிய அளவிலான ஆக்கி  போட்டிகள் இனி கோவையிலும் நடைபெறும்: உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 Dec 2025 12:52 PM IST (Updated: 30 Dec 2025 4:18 PM IST)
t-max-icont-min-icon

நவீன வசதிகளுடன் 7 ஏக்கரில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையின் தலைநகராக மாற்றியிருக்கும் திராவிட_மாடல் அரசு சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவை ஆர்.எஸ்.புரத்தில் சுமார் ரூ.10 கோடியில் Astro Turf வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தை இன்று திறந்து வைத்தோம்.

இரவிலும் போட்டிகளை நடத்தும் வகையில் மின்கோபுர விளக்குகளுடனும், அனைத்து நவீன வசதிகளுடனும் 7 ஏக்கரில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் சென்னை, மதுரை போன்று இனி கோவையிலும் நடைபெற இருப்பதில் மகிழ்கிறோம்.

இந்த ஸ்டேடியத்தை கோவையைச் சேர்ந்த ஹாக்கி வீரர், வீராங்கனைகள் சிறந்த முறையில் பயன்படுத்தி, புதிய சாதனைகள் படைக்க என் அன்பும், வாழ்த்தும்.என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story