ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்தியா வெற்றி

இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் மியான்மரை சந்தித்தது.

ஆசிய பேட்மிண்டன் போட்டி:  இந்தியா வெற்றி
Published on

கிங்டாவோ,

6-வது ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ‘ஒய்’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் மியான்மரை சந்தித்தது. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கணக்கில் மியான்மரை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.

ஆண்களில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சிங்கப்பூரை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com