ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு வெள்ளி

கோப்புப்படம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
ஷிம்கென்ட்,
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. அன்மோல், ஆதித்யா மல்ரா, சவுரப் சவுத்ரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,735 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் கபில் 243 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஜோனாதன் கவின் அந்தோனி 220.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோனி (582), கபில் (562), விஜய் தோமர் (562) ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,723 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றது.






