டெல்லியில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது
பாரீஸ்,
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது. இதில் இந்தியாவில் இருந்து 15 வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. மற்றவர்கள் காலிறுதியை தாண்டவில்லை.
இதன் நிறைவு விழாவில், 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டெல்லியில் நடத்தப்படும் என உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. கவுரவமிக்க இந்த போட்டி இந்தியாவில் நடப்பது இது 2-வது முறையாகும். கடைசியாக 2009-ம் ஆண்டில் ஐதராபாத்தில் நடந்தது. ‘பாரீஸ் வெளிப்படுத்திய அதே சிறப்பு, பிரமாண்டம், தரத்துடன் சாம்பியன்ஷிப்பை முன்னெடுத்து செல்வோம் என உறுதி அளிக்கிறோம். டெல்லிக்கு பேட்மிண்டன் குடும்பத்தினரை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என இந்திய பேட்மிண்டன் சம்மேளன பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா குறிப்பிட்டார்.






