இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய், ஸ்ரீகாந்த் சாய்னா, சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்தோனேஷியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய், ஸ்ரீகாந்த் சாய்னா, சிந்து அதிர்ச்சி தோல்வி
Published on

ஜகர்தா,

இந்தோனேஷியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 2110, 2118 என்ற நேர்செட்டில் 3 முறை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மலேசிய வீரர் லீ ஷோங் வெய்யை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2115, 2022, 2116 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ஜன் ஒ ஜோர்ஜென்சென்னை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 1521, 216, 1621 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை நிட்ஷான் ஜின்டாபோலிடம் தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2115, 1221, 1821 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை பெய்வென் ஷாங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com