ரோபோட் வாக்குவம் கிளீனர்
ரோபோட் வாக்குவம் கிளீனர் மாப் 2 ஐ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளின் அறைகளை சுத்தப்படுத்த உதவும் வகையில் இதில் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குவம் கிளீனர் அறையின் மூலை முடுக்குகளுக்குச் சென்று சுத்தம் செய்யும். கைராஸ்கோப், ஆப்டிகல் சென்சார் ஆகியன உள்ளன. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் ஒன்றரை மணி நேரம் செயல்படக் கூடியது. 1,200 சதுர அடி பரப்பளவை சுத்தம் செய்துவிடும். தண்ணீர் போட்டு துடைக்கும் வசதியும் இதில் உள்ளது. அதற்கேற்ப தண்ணீரை நிரப்ப தொட்டியும் உள்ளது. அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டென்ட் மூலமும் இதை செயல்படுத்தலாம். ரோபோட் வாக்குவம் கிளீனரின் விலை சுமார் ரூ.16,999.
Related Tags :
Next Story