டெல்லி முதல்வரை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து சென்ற கமல்ஹாசன் மகள்


டெல்லி முதல்வரை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து சென்ற கமல்ஹாசன் மகள்
x
தினத்தந்தி 21 Sep 2017 9:12 AM GMT (Updated: 21 Sep 2017 9:11 AM GMT)

டெல்லி முதல்வரை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து சென்ற கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசன்

சென்னை

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார்.

இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.  சமீபத்தில் கேரள மாநிலம் சென்று அங்கு முதல் மந்திரி பிணராய் விஜயனை சந்தித்தார்.

இந்தநிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெற இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வருகைதரும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனைச் சந்திக்க உள்ளனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் சென்னை விமான நிலையத்தில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். 

Next Story