‘பாரீஸ் ஜெயராஜ்’ சந்தானத்தின் புதிய படம்


‘பாரீஸ் ஜெயராஜ்’ சந்தானத்தின் புதிய படம்
x
தினத்தந்தி 2 Dec 2020 5:30 AM IST (Updated: 2 Dec 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

சந்தானம் நடிப்பில் இந்த வருடம் டகால்டி, பிஸ்கோத் படங்கள் திரைக்கு வந்தன.


சந்தானம் நடிப்பில் இந்த வருடம் டகால்டி, பிஸ்கோத் படங்கள் திரைக்கு வந்தன. அடுத்து அவர் நடித்து வரும் புதிய படம் பற்றிய விவரத்தை நேற்று அறிவித்தனர். இந்த படத்துக்கு ‘பாரீஸ் ஜெயராஜ்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஜான்சன் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘ஏ1’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது. தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். பாரீஸ் ஜெயராஜ் படம் நகைச்சுவை கதையம்சத்தில் தயாராகிறது. 

படத்தில் சந்தானத்தின் முதல் தோற்றத்தை வலைத்தளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கே.குமார் தயாரிக்கும் இந்த படத்தில் அனைக்கா சொடி, சஷ்திகா ராஜேந்திரன் ஆகிய 2 கதாநாயகிகள் நடிக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பாடல் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. படத்தை ஜனவரியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
1 More update

Next Story