ஒருநாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் கேட்கும் சிருஷ்டி!


ஒருநாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் கேட்கும் சிருஷ்டி!
x
தினத்தந்தி 25 Sep 2017 8:28 AM GMT (Updated: 25 Sep 2017 8:28 AM GMT)

சிருஷ்டி டாங்கே, மும்பை அழகி என்பது நிறைய பேருக்கு தெரியாதாம். தமிழ் படப்பிடிப்புகளுக்கு மும்பையில் இருந்து வந்து போகும் கதாநாயகிகள் வரிசையில், இவரும் இருக்கிறார்.

இவர் திரையுலகுக்கு அறிமுகமான ஆரம்ப காலத்தில், ஒரு படத்துக்காக 120 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து நடித்தாராம். அதற்கு சம்பளமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தார்களாம். கிடைத்த வரை லாபம் என்று அந்த சம்பளத்தை வாங்கிக் கொண்டாராம்.

“அது, மிக குறைந்த சம்பளம்தான் என்றாலும், நான் பிரச்சினை செய்யவில்லை. அமைதியாக இருந்தது புத்திசாலித்தனம் என்பதை பிறகு உணர்ந்து கொண்டேன். இப்போது நாள் கணக்கில் சம்பளம் வாங்குகிறேன். ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் கேட்கிறேன். கொடுத்து விடு கிறார்கள். யாரும் பிரச்சினை செய்வதில்லை. படப்பிடிப்புக்கு முந்திய நாளே சம்பளத்தை கொடுத்து விடுகிறார்கள்” என்கிறார், சிருஷ்டி டாங்கே!

Next Story