வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்


வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்
x
தினத்தந்தி 9 Feb 2017 9:20 AM IST (Updated: 9 Feb 2017 9:20 AM IST)
t-max-icont-min-icon

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐதராபாத்,

முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இரு அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. 2000-ம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்காளதேச அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா வந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதனால் இந்த போட்டியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது அணி முதலில் பேட்டிங் செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்து வருகிறது.

டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. எனவே இந்த போட்டியையும் எளிதில் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:- “ முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிதிமான் சஹா,அஷ்வின், ஜடேஜா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா,

வங்காளதேச அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:-

தமிம் இக்பால், சவுமியா சர்கார், மோமினுல் ஹாக், மஹமுதுல்லா, ஷாகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹீம், சபீர் ரகுமான், மேஹதி ஹாசன், தைஜூல் இஸ்லாம், டஷ்கின் அகமது, கம்ருல் இஸ்லாம் ராபி,


Next Story