இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்


இந்தியாவுக்கு எதிரான  டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் வென்று ஆஸ்திரேலிய  அணி முதலில் பேட்டிங்
x
தினத்தந்தி 23 Feb 2017 9:30 AM IST (Updated: 23 Feb 2017 9:41 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிகெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

புனே,

விராட் கோலி தலைமையில் தொடர்ந்து அசத்தி வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது.

புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். அதன் படி இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது. 

2008–ம் ஆண்டு தொடரின் போது ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலியாவின் சைமண்ட்சை குரங்கு என்று திட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் இருந்து இந்தியா–ஆஸ்திரேலியா மோதல் என்றாலே ஒரு வித பகைமை உணர்வோடு பார்க்கும் நிலை உருவாகி விட்டது.

அது தான் ரசிகர்களின் ஆவலையும் தூண்டுகிறது. இன்றைய போட்டியிலும் அத்தகைய எதிர்பார்ப்புக்கும் பஞ்சமில்லை. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால்  களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 More update

Next Story