ரொக்கமற்ற பொருளாதாரம் என்கிற பெயரில் மோடி, சாதாரண மக்களை பணம் இல்லாதவர்களாக ஆக்கிவிட்டார் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ரொக்கமற்ற பொருளாதாரம் என்கிற பெயரில் சாதாரண மக்களை பணம் இல்லாதவர்களாக மோடி ஆக்கிவிட்டார் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
தாத்ரி,

உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி நகரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று வணிகர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது:–
பணம் இல்லாதவர்களாக ஆக்கிவிட்டார்
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் ரொக்கமற்ற பொருளாதாரத்தை நாட்டில் ஏற்படுத்துவதுதான் தனது லட்சியம் என்று பிரதமர் கூறி வருகிறார்.
அவருடைய இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் முற்றிலுமாக கையில் பணம் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர். அவர் ஏழைகள் மீது போர் தொடுத்து இருக்கிறார். நேர்மையான மக்களை மோடி நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்.
பின்புற வாசல் வழியாக...
ஏழைகள்தான் பணத்தை எடுப்பதற்காக நீண்ட வரிசையில் வங்கிகளுக்கு வெளியே காத்துக்கிடக்கின்றனர். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை. அவர்கள் பின்புற வாசல் வழியாக பணத்தை எடுத்து வருகின்றனர். ஏழைகளின் பணம் இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்கு வங்கிகளில் இருக்கவே மோடி விரும்புகிறார்.
ரூபாய் நோட்டின் மீதான நடவடிக்கையால் பெரும் தொழில் அதிபர்களும், நிறுவனங்களும்தான் பயன் அடைந்து இருக்கின்றன. அவர்களுக்கு வங்கிகள் 8 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் கொடுத்து இருக்கின்றன. வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தால் பெரும் தொழில் நிறுவனங்கள்தான் பலன் அடைந்து இருக்கின்றன. எனவே ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு முழுக்க முழுக்க பணக்காரர்களுக்குத்தான் சாதகமாக அமைந்து இருக்கிறது. ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க மோடி விரும்புகிறார்.
மிகப்பெரிய ஊழல்
ரொக்கமற்ற பொருளாதாரம் நாட்டில் வந்துவிட்டால் விவசாயிகளின்
5 சதவீத பணம் அவர்களுக்கு தெரியாமலேயே தொழில் அதிபர்களுக்கு சென்றுவிடும்.
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story