நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் தேர்வு


நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் தேர்வு
x
தினத்தந்தி 3 April 2017 9:44 AM GMT (Updated: 3 April 2017 9:43 AM GMT)

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் முதலிடம் பிடித்து ஐஐடி மெட்ராஸ் சாதனை படைத்துள்ளது

புதுடெல்லி

2017ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிடபட்டு உள்ளது. வெளியிட்ட பட்டியலில் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் முதலிடம்  இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தலைசிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூரு முதலிடம் பிடித்து உள்ளது. இரண்டாவது இடம்  ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்திற்கும் 3 வது இடம்  பனாரஸ் இந்து பல்கலைகழகம் வாரனாசிக்கும்  கிடைத்து உள்ளன. அண்ணா பல்கலைகழகத்திற்கு 13 வது இடம் கிடைத்து உள்ளது.

சிறந்த கல்லூரியாக முதல் இடத்தில் மிராண்டா ஹவுஸ் டெல்லி,  2 வது டத்தில் லயோலா கல்லூரி சென்னை, 3 வது இடத்தில் ஸ்ரீ ராம்  காலேஜ் ஆப் காமர்ஸ் -டெல்லி  ஆகியவை இடம் பெற்று உள்ளன.

Next Story