உ.பி. ரயில் விபத்து தீவிரவாதச் செயலா? காவல் துறை ஆய்வு


உ.பி. ரயில் விபத்து தீவிரவாதச் செயலா? காவல் துறை ஆய்வு
x
தினத்தந்தி 20 Aug 2017 7:23 PM GMT (Updated: 20 Aug 2017 7:23 PM GMT)

உ.பி. ரயில் விபத்தில் இதுவரை தீவிரவாதச் செயல் ஏதும் காணப்படவில்லை என்று உ.பி காவல்துறை தெரிவித்துள்ளது.

லக்னோ

உத்கல் கலிங்கா ரயில் விபத்தில் இதுவரை 22 பேர் இறந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தி வரும் உயர் அதிகாரிகள் சதிச் செயல்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றனர். இருப்பினும் சம்பவம் நடந்த இடத்தில் தண்டவாளம் அறுக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்கு சில பராமரிப்புப் பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. அச்சமயத்தில் நடந்த கவனக்குறைவான செயலே ரயில் விபத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். தண்டவாளம் சரியாக பொருத்தப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதனிடையே பராமரிப்புப் பணிகளுக்கு முன் அனுமதி பெறப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

நூறு கிலோமீட்டர் தூரத்தில் ஓடிய ரயிலின் ஆறு பெட்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பூர்வாங்க ஆதாரங்களை ஞாயிறு மாலைக்குள் திரட்டும்படி கூறியிருந்தார். முறையற்ற பராமரிப்பு வேலைகளே விபத்திற்கு காரணம் என்று பூர்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எவ்வகையான பராமரிப்பு வேலைகள் அங்கு நடந்தன என்பது குறித்தும் தகவல்கள் இல்லை. 

இதனிடையே ஏழு ஊழியர்கள், ஒரு செயலர் நிலை அதிகாரி ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Next Story