எல்லையில் சீன ராணுவம் போர் ஒத்திகை; இந்திய படைகள் வலிமையை கொண்டு உள்ளது - ராஜ்நாத் சிங்


எல்லையில் சீன ராணுவம் போர் ஒத்திகை; இந்திய படைகள் வலிமையை கொண்டு உள்ளது - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 21 Aug 2017 10:49 AM GMT (Updated: 21 Aug 2017 10:49 AM GMT)

டோக்லாம் மோதல் நீடித்து வரும் நிலையில் எல்லையில் மீண்டும் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது.

புதுடெல்லி,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து உள்ளன. இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தி வரும் சீனா, அங்கு போர் தொடுக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.

ஆனால் அண்டை நாடுகள் அளிக்கும் எவ்வித சவாலையும் சந்திக்க போதுமான வலிமை இந்திய படைகளுக்கு இருப்பதாக ராணுவ மந்திரி அருண் ஜெட்லி மீண்டும் உறுதிபட தெரிவித்துவிட்டார். தொடர்ச்சியாக சீனா மிரட்டல் விடுக்கும் வகையில் அறிக்கையை விடுத்து வருகிறது.

டோக்லாம் மோதலால் எல்லையில் பதட்டம் அதிகரித்து உள்ளநிலையில் சீன ராணுவம் அடிக்கடி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. மேற்கு பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவில் அதிர்ச்சி மற்றும் பயத்தை ஏற்படுத்தும் வகையிலான போர் ஒத்திகை நடத்தப்பட்டது சீன ராணுவ வல்லூநர் கூறிஉள்ளார் என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்ட காலம் மற்றும் இடமானது உடனடியாக வெளியாகி உள்ளது. 

சீனாவின் விமானப்படையும், தரைப்படையும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது. திபெத், ஜிங்ஜியாங், நிங்ஜியா, கிங்காய், சிச்சுவான் மற்றும் சோங்கிங் ஆகியப்பகுதிகள் சீனாவில் மேற்குபிராந்திய ராணுவ பாதுகாப்பு மையத்தின் கீழ் வருகிறது.

ராஜ்நாத் சிங்

இந்தோ-திபெதியன் எல்லை போலீசார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 
“ டோக்லாம் பிரச்சினையை பொறுத்தவரையில் விரைவில் தீர்வு காணப்படும். இந்த விவகாரத்தில் சீனா நேர்மறையான நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியா அமைதியயே விரும்புகிறது என்று நான் அனைத்து அண்டைநாடுகளுக்கும் சொல்லிக்கொள்கிறேன். எனினும், இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தங்கள் எல்லையை பாதுகாக்கும் அனைத்து வல்லமையும் உள்ளது” என்றார். 

இந்தியா தன்னுடைய எல்லையை விரிவாக்க விரும்பியது கிடையாது. ஆனால் என்னால் தீர்க்கமாக சொல்ல முடியும் என்னவென்றால் நம்முடைய பாதுகாப்பு படைகள் அனைத்தும் நம்முடைய எல்லையை பாதுகாக்கும் வலிமையை கொண்டு உள்ளது, என்றார் ராஜ்நாத் சிங்.


Next Story