பஞ்சாப்பில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்


பஞ்சாப்பில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 18 Oct 2017 1:54 PM GMT (Updated: 18 Oct 2017 1:54 PM GMT)

பஞ்சாப்பில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள கைலாஷ் நகர் பகுதியில் வசித்து வந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ரவீந்தர் கோசாய், நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நொடிப்பொழுதில், கோசாய்யை சுட்டுக்கொன்றுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர். கொலைகாரர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “ லூதியானாவில், கோசாய் என்ற ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. வன்முறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story