இந்தியா இளைஞர்களின் தேசம் இதனை வழிநடத்த ராகுல் காந்தி என்ற தலைவர் தேவை - சோனியா காந்தி


இந்தியா இளைஞர்களின் தேசம் இதனை வழிநடத்த ராகுல் காந்தி என்ற தலைவர் தேவை - சோனியா காந்தி
x
தினத்தந்தி 16 Dec 2017 6:32 AM GMT (Updated: 16 Dec 2017 6:32 AM GMT)

இந்தியா இளைஞர்களின் தேசம் இதனை வழிநடத்த ராகுல் காந்தி என்ற தலைவர் தேவை என சோனியா காந்தி கூறினார்.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி  பேசியதாவது:

தலைவராக பொறுப்பேற்றதற்கு ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.  காங்கிரஸ் கட்சி புதிய திசையை நோக்கி பயணிக்கிறது. பல்வேறு சவால்கள் நம் முன் காத்து கிடக்கிறது; சவால்களை சாதனையாக்குவார் என நம்புகிறேன்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு  நான் தலைவராக பொறுப்பேற்ற போது அச்சத்தில் இருந்தேன். காங்கிரஸ் கட்சியை வழி 
நடத்துவேனா என்ற சந்தேகம்  ஏற்பட்டது; ஆனால் அதனை முறியடித்து  இத்தனை ஆண்டு காலம் பயணித்துள்ளேன்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டை நேர்மையான முறையில் வழிநடத்தினார். இது கட்சிக்கு பலத்தை கொடுத்தது.
இந்தியா இளைஞர்களின் தேசம். இதனை வழிநடத்த ராகுல் காந்தி என்ற தலைவர் தேவை. மத நல்லிணக்கத்திற்கு எதிராக பல போராட்டங்கள் தினமும் நடைபெற்று வருகிறது. இதை மாற்ற வேண்டும்.

என்னுடைய குடும்பத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி விடவே நினைத்தேன்; ஆனால் எனது கணவரின் மரணத்திற்கு பிறகு அரசியலில் வரும் கட்டாயம் ஏற்பட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடையும் வகையில் நானே தலைமை பொறுப்பை ஏற்றேன்.

லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் ஆதரவே கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றது இதற்கு நன்றி.

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

Next Story