குஜரத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு

குஜராத்தில் வரும் 28 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குஜரத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் அனைத்து நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு
Published on

காந்திநகர்,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு குஜராத்தில் வரும் 28-ஆம் தேதி மே 5- ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள 29 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் மந்திரி விஜய் ரூபானி அறிவித்துள்ளார். இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குஜராத்தில் உள்ள 20 பெரு நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலம் முழுவதும் மத தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது. பூஜைகள் செய்ய மட்டுமே அனுமதி உண்டு.

பொது போக்குவரத்து 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு எனவும் குஜராத் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com