தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தெலங்கானாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,19,966 ஆக அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்திலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று தெலங்கானா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலங்கானாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,19,966 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 56 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, தெலங்கானாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,150 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 5,093 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் தெலங்கானாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,45,683 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் தற்போது 72,133 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com