நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.. நீங்கள் டி20 விளையாடுவீர்களா? ஓவைசி விமர்சனம்

இந்திய மக்களின் உயிரோடு காஷ்மீரில், பாகிஸ்தான் தினம் தினம் 20-20 விளையாடுகிறது என ஓவைசி கூறினார்.
நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.. நீங்கள் டி20 விளையாடுவீர்களா? ஓவைசி விமர்சனம்
Published on

ஐதராபத்,

ஐதராபாத் எம்.பியும் எஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி, பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்தியா விளையாட உள்ளதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து ஓவைசி கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் லடாக்கில் நமது பகுதியில் சீனா ஊடுருவியிருப்பது ஆகிய இரு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி ஒரு போதும் பேசமாட்டார். சீனா குறித்து பேச பிரதமர் மோடி பயப்படுகிறார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நமது வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வரும் 24 ஆம் தேதி 20 ஓவர் போட்டியில் விளையாடுமா? இந்திய மக்களின் உயிரோடு காஷ்மீரில் பாகிஸ்தான் தினம் தினம் 20-20 விளையாடுகிறது. பீகாரை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. உளவுத்துறையும் உள்துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசின் தோல்வியையே இது காட்டுகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com