கவர்னர் நாளை சென்னை வர உள்ளதை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ-க்களின் டெல்லி பயணம் திடீர் ரத்து


கவர்னர் நாளை சென்னை வர உள்ளதை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ-க்களின் டெல்லி பயணம் திடீர் ரத்து
x
தினத்தந்தி 8 Feb 2017 10:09 PM IST (Updated: 8 Feb 2017 10:09 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் நாளை சென்னை வர உள்ளதை அடுத்து அதிமுக எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டது.

சென்னை,

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதலால். தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக தலைமை மற்றும் சக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அக்கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் ஐயக்கியமாகிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறி, அவரது பொருளாளர் பதவியில் இருந்து நீக்கினார்.

இந்த சூழலில் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று, அனைவரும் கட்டுக்கோப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்த 130 எம்.எல்.ஏக்களும் சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னை மாநகரில் வலம் வந்தது.

இதற்கிடையில் எம்.எல்.ஏக்கள் சிலர், இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் மும்பையிலிருந்து சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருவதை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க நாளை பிற்பகல் நேரம் ஒதுக்கியுள்ளதாக கவர்னர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 More update

Next Story