ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம்–ஜெ.தீபா அஞ்சலி


ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம்–ஜெ.தீபா அஞ்சலி
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 11:40 PM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வின் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சென்னை,

நேற்று முன்தினம் வரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு 12 எம்.பி.க்கள் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நியில் நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேசினார்கள்.

1 More update

Next Story