அதிநவீன போர் கப்பல் நாளை சென்னை வருகிறது பொதுமக்கள் பார்வையிட மெரினாவில் நிறுத்தப்படுகிறது


அதிநவீன போர் கப்பல் நாளை சென்னை வருகிறது பொதுமக்கள் பார்வையிட மெரினாவில் நிறுத்தப்படுகிறது
x
தினத்தந்தி 14 April 2017 3:11 AM IST (Updated: 14 April 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் அதிநவீன போர் கப்பல் நாளை (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறது.

சென்னை,

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மெரினாவில் மின்அலங்காரத்துடன் நிறுத்தி வைக்கப்படுகிறது.

அதிநவீன போர் கப்பல்

இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘ஐ.என்.எஸ். சென்னை’ முதல்முறையாக மும்பையில் இருந்து நாளை (சனிக்கிழமை) சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. அதிநவீன சக்தி கொண்ட இந்த கப்பல் மும்பையில் உள்ள இந்தியாவின் மேற்கு கப்பற்படை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த கப்பல், நாளை மாலை 5 மணி முதல் இரவு 11½ மணி வரை சென்னை மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்காக மின்அலங்காரத்துடன் நிறுத்தி வைக்கப்படுகிறது.

ரேடார் கருவிகள்

இந்த கப்பல் 163 மீட்டர் நீளமும், 17.4 மீட்டர் அகலமும், 7 ஆயிரத்து 500 டன் எடையும் கொண்டது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த போர் கப்பலை இந்தியா வடிவமைத்து உள்ளது. இந்த கப்பல் 4 சக்தி வாய்ந்த எரிவாயு விசைக்கருவிகள் மூலம் இயக்கப்படுகிறது. பிற போர் கப்பல்களை விட வேகமாக செல்லும் சக்தி கொண்டது.

அத்துடன் அதிநவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளை கொண்டது. இந்த கப்பலின் மேல்தளத்தில் ஏவுகணைகள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் நிறைந்து உள்ளன. அத்துடன் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை ராக்கெட் ஏவுகணை மற்றும் கண்ணிவெடி ஏவுகணைகள் மூலம் தாக்கும் திறன் கொண்டது.  மேற்கண்ட தகவலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.

1 More update

Next Story