ஆட்சியை பற்றி கவலை இல்லை: கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்


ஆட்சியை பற்றி கவலை இல்லை:  கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்
x
தினத்தந்தி 20 Aug 2017 10:15 PM GMT (Updated: 20 Aug 2017 5:07 PM GMT)

ஆட்சியை பற்றி கவலை இல்லை. கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சென்னை,

டி.டி.வி.தினகரனை சென்னை பெசன்ட்நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்துவிட்டு, வெளியே வந்த நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஆட்சியை கைப்பற்ற வேண்டுமா? காப்பாற்ற வேண்டுமா? என்பது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘கோர்ட்டில்’ இருக்கும் பந்து. ஆகவே நாங்கள் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. கட்சியை காப்பாற்றுவதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். திராவிட இயக்கத்தில் எல்லா அதிகாரமும் பொது செயலாளருக்குத்தான் உண்டு. ஆனால் இவர்கள் (ஓ.பன்னீர்செல்வம் அணியினர், எடப்பாடி பழனிசாமி அணியினர்) மணல் வீடு கட்டி மகிழ்கிற பிள்ளை விளையாட்டு விளையாடுகிறார்கள்.

அவர்கள் எது செய்தாலும், அது செல்லுபடியாகாது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அரசியல் அனாதைகள் ஆக்கப்படுவார்கள். டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் தவிர்க்க முடியாத தலைவர்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story