நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தர்மம் வென்றது - எச்.ராஜா கருத்து


நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தர்மம் வென்றது - எச்.ராஜா கருத்து
x
தினத்தந்தி 22 Aug 2017 10:12 AM GMT (Updated: 22 Aug 2017 10:12 AM GMT)

நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தர்மம் வென்றது என பாரதீய ஜனதாவின் தேசிய செயலாளர் எச். ராஜா கூறிஉள்ளார்.


சென்னை,

தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
 
நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டம் ஏற்கப்படாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு கோர்ட்டில் தெரிவித்து உள்ளது. மாநில அரசு ஒரு ஆண்டு விலக்கு என்ற வகையில் மாநில அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தால் நாங்கள் உதவுவோம் என மத்திய அரசு கூறியதும் மாநில அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. தமிழக அரசின் அவசரச்சட்டத்திற்கு மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கிய நிலையில் மத்திய அரசு திடீர் பல்டியாக சுப்ரீம் கோர்ட்டில் நீட் தேர்வில் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என கூறிஉள்ளது.

இந்நிலையில் பாரதீய ஜனதாவின் தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மாணவ சேர்க்கை நடைபெற உள்ளது. தர்மம் வென்றுவிட்டது. நீட் மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...” என கூறிஉள்ளார். 

Next Story