அரசு பேருந்து கண்டனம் அதிரடியாக உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது


அரசு பேருந்து கண்டனம் அதிரடியாக உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 19 Jan 2018 3:13 PM GMT (Updated: 19 Jan 2018 3:13 PM GMT)

பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. #BusFaresHiked #TamilNadu


சென்னை,

 
தமிழ்நாட்டில் பஸ் கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. 6 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று இன்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயாகவும் இருந்தது. இப்போது  குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.  

சாதாரண பஸ் (10 கி.மீ) கட்டணம் புறநகர் ரூ. 5-ல் இருந்து ரூ.6 ஆக உயர்வு

விரைவு பஸ் கட்டணம் (30 கி.மீ)  ரூ.17-ல் இருந்து ரூ.24 ஆக உயர்வு

அதி சொகுசு, இடைநில்லா பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ் கட்டணம் (புறவழிச்சாலை 30 கி.மீ) ரூ.18-ல் இருந்து ரூ.27 ஆக உயர்வு

அதிநவீன சொகுசு பஸ் கட்டணம் (30 கி.மீ) ரூ. 21-ல் இருந்து ரூ. 33 ஆக உயர்வு.

குளிர்சாதன பஸ் கட்டணம் (30 கி.மீ) ரூ. 27-ல் இருந்து ரூ. 42 ஆக உயர்வு.

வால்வோ பஸ் கட்டணம் (30 கி.மீ) ரூ. 33-ல் இருந்து ரூ.51 ஆக உயர்வு.

சாதாரண பஸ் (6 கி.மீ) - 4 - அடிப்படை கட்டணம் + 20 சதவீதம்.

விரைவு பஸ் (30 கி.மீ) - 20 - அடிப்படை கட்டணம் + 20 சதவீதம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு அடிப்படை பயண கட்டணத்துடன் 20% கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவில் பேருந்து கட்டணங்கள் மாற்றியமைப்பு விபரங்களையும் அரசு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் சாதாரண புறநகர் பேருந்தின் புதிய கட்டணம் கேரளா, ஆந்திர மாநிலத்தைவிட குறைவானதாகும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. கட்டணங்களை அம்மாநில அரசுக்கள் ஏற்கனவே ஏறத்தாழ மூன்று அண்டுகளுக்கு முன்னதாகவே உயர்த்திவிட்டன எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து கழகங்களுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.20,488 கோடியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story