அங்காராவில் ரஷிய தூதர் சுட்டுக் கொலை “ரஷியா உடனான உறவை பாதிக்கவிட மாட்டோம்” துருக்கி

அங்காராவில் ரஷிய தூதர் சுட்டுக் கொலை “ரஷியா உடனான உறவை பாதிக்கவிட மாட்டோம்” துருக்கி
x
தினத்தந்தி 20 Dec 2016 4:25 AM GMT (Updated: 20 Dec 2016 4:24 AM GMT)

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது துருக்கி போலீசார் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்ற தொடங்கிய போது, சிரியா மற்றும் அலெப்போ நகர் குறித்த வாசகத்துடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய காவலர் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இத்தாக்குதலில் பலர் காயம் அடைந்து உள்ளனர்.

அங்காரா,

துருக்கியில் ரஷிய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள துருக்கி ‘ ரஷியா உடனான உறவை பாதிக்கவிட மாட்டோம்” என கூறிஉள்ளது.

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது துருக்கி போலீசார் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்ற தொடங்கிய போது, சிரியா மற்றும் அலெப்போ நகர் குறித்த வாசகத்துடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய காவலர் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இத்தாக்குதலில் பலர் காயம் அடைந்து உள்ளனர். 

தாக்குதல் நடைபெற்ற கலைக்கூடத்தில் பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிரியா விவகாரம் தொடர்பாக ரஷியா, துருக்கி மற்றும் ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளநிலையில் இந்த துப்பாக்கி சூடானது நடந்து உள்ளது. ரஷிய தூதர் கொல்லப்பட்ட தாக்குதல் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என கூறிஉள்ள துருக்கி, தாக்குதல் தொடர்பாக ரஷியா அதிபர் விளாடிமீர் புதினிடம் அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதாக கூறிஉள்ளது. சிரியா விவகாரத்தில் ரஷியாவின் பங்கிற்கு எதிராக துருக்கியில் போராட்டம் நடைபெற்றது, இருப்பினும் துருக்கி மற்றும் ரஷியா போர் நடைபெற்று வரும் அலெப்போவில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதில் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறது. 

இந்நிலையில்தான் அங்கு ரஷிய தூதரை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
 
அங்காரா மேயர் தாக்குதல் நடத்தியவர் துருக்கி காவலர் என அடையாளம் தெரிவித்து உள்ளார். 

துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேசுகையில், “துப்பாக்கி சூடு நடத்தியவர் அலெப்போ குறித்து கோஷம் எழுப்பினார் மற்றும் “பழிவாங்குதல்” என கோஷமிட்டார். கலைக்கூடத்தில் இருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற கேட்டுக் கொண்டார். எப்போது மக்கள் ஓட தொடங்கினரோ அப்போதும் துப்பாக்கியால் சுட்டார்.” என்றார். அலெப்போவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் மீறலுக்கு ரஷியாதான் காரணம் என துருக்கியில் போராட்டம் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா எல்லையில் அத்துமீறி பறந்த ரஷிய போர் விமானத்தை கடந்த வருடம் துருக்கி சுட்டு வீழ்த்தியது இதனையடுத்து இருநாட்டு உறவில் மோசமான நிலையானது ஏற்பட்டது. இப்போது ரஷிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ள நிலையில் “ரஷியா உடனான உறவை பாதிக்கவிட மாட்டோம்’ என துருக்கி வெளியுறவுத்துறை கூறிஉள்ளது.

Next Story