இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்


இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
x
தினத்தந்தி 20 Aug 2017 11:15 PM GMT (Updated: 20 Aug 2017 7:29 PM GMT)

இங்கிலாந்து நாட்டில் சேனல் 4 நடத்துகிற வினாடி வினா போட்டி மிகவும் பிரபலம்.

லண்டன்,

ஐ.கியூ. என்று அழைக்கப்படுகிற நுண்ணறிவுத்திறனை வெளிப்படுத்துகிற இந்த போட்டியில் லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் ராகுல் தோஷி (வயது 12) கலந்து கொண்டார்.நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் இவர், 9 வயதான ரோனன் என்பவரை 10–க்கு 4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்தின் மழலை மேதை பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டியில் 19–ம் நூற்றாண்டு கலைஞர்கள் வில்லியம் ஹோல்மேன் ஹண்ட் மற்றும் ஜான் எவரெட் மில்லாயிஸ் பற்றிய கேள்விக்கு ராகுல் தோஷி சரியாக பதில் அளித்தார்.

ராகுல் தோஷியின் நுண்ணறிவுத்திறன் 162 புள்ளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது புகழ்பெற்ற விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் நுண்ணறிவுத்திறனை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியை ராகுல் தோஷியின் தந்தை மினேஷ் தோஷியும், தாய் கோமலும் நேரில் கண்டு மகிழ்ந்தனர்.


Next Story