லெபனான் பிரதமர் ஹரிரி பிரான்ஸ் சென்றார்


லெபனான் பிரதமர் ஹரிரி பிரான்ஸ் சென்றார்
x
தினத்தந்தி 18 Nov 2017 9:34 AM GMT (Updated: 18 Nov 2017 9:36 AM GMT)

சவூதி அரேபியாவில் இருந்து ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் ஹரிரி இன்று பிரான்ஸ் சென்றார்.

பாரீஸ்,

லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி.  இவர் கடந்த 4ந்தேதி சவுதி அரேபியா சென்றார். சவூதி அரேபியாவில் இருந்தபடியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர்.

ஹரிரி கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் ஆன் குற்றம் சாட்டினார்.  ஆனால் இதற்கு  சவூதி அரேபியா அரசு மறுப்பு தெரிவித்தது.  அவர் விரும்பும்பொழுது இங்கிருந்து செல்லலாம் என்றும் கூறியது.

இந்நிலையில், ஹரிரியை பிரான்சுக்கு வரும்படி அழைப்பு விடப்பட்டது.  இதனை தொடர்ந்து சவூதி அரேபியாவில் இருந்து தனது மனைவி லாராவுடன் நேற்றிரவு ஹரிரி கிளம்பினார்.  அவர் பாரீஸ் நகரில் உள்ள லே போர்கெட் விமான நிலையத்தில் இன்று வந்து இறங்கினார்.

லெபனானில் உள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுவதற்கான முயற்சியில் பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஈடுபட்டுள்ளார்.  இதனால் இன்று மதியம் மேக்ரானை ஹரிரி சந்தித்து பேசுகிறார்.

Next Story