ஐ.பி.எல் : அதிரடியில் மிரட்டிய நரைன் , பில் சால்ட்...கொல்கத்தா அணி 261 ரன்கள் குவிப்பு


ஐ.பி.எல் : அதிரடியில் மிரட்டிய  நரைன் , பில் சால்ட்...கொல்கத்தா அணி 261 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 26 April 2024 3:56 PM GMT (Updated: 26 April 2024 4:02 PM GMT)

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 261ரன்கள் எடுத்தது

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக சுனில் நரைன் , பில் சால்ட் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய சுனில் நரைன் , பில் சால்ட் இருவரும் அரைசதம் அடித்தனர்.தொடக்க விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்த நிலையில் 32 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து சுனில் நரைன் ஆட்டமிழந்தார். பின்னர் பில் சால்ட் 37 பந்துகளில் 75ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ரசல் 24 ரன்களும் , ஷ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களும் , வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களும் எடுத்தனர்,.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 261ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 262ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடுகிறது.


Next Story