சி.எஸ்.கே. அணியை வீழ்த்த அந்த ஒரு மும்பை வீரர் போதும் - அஸ்வின்


சி.எஸ்.கே. அணியை வீழ்த்த அந்த ஒரு மும்பை வீரர் போதும் - அஸ்வின்
x

image courtesy: PTI

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐ.பி.எல். தொடங்கப்பட்டது முதலே இவ்விரு அணிகளும் வெற்றியை பெறுவதற்காக பலமுறை அனல் பறக்க மோதியுள்ளன. அதனால் ஐ.பி.எல். வரலாற்றின் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகள் இம்முறை எம்.எஸ். தோனி மற்றும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டன்களான ருதுராஜ் – ஹர்திக் தலைமையில் மோதுகின்றன. இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டால் ஏற்படும் இருட்டில் விளக்கை பயன்படுத்துவதுபோல அழுத்தமான சூழ்நிலையில் எதிரணியை வீழ்த்தும் மும்பையின் துருப்புச்சீட்டாக பும்ரா இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். எனவே அவரைத் தாண்டி சி.எஸ்.கே. வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இரவில் மின்சாரம் தடைபடும்போது நாம் அவசர விளக்கை பயன்படுத்துவோம். அதேபோல பும்ராவை மும்பை இந்தியன்ஸ் எமர்ஜென்சி லைட்டாக பயன்படுத்துகிறது. எனவே அவர் விக்கெட் எடுத்தால் அது பவர் பிளேவில் மும்பைக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக இருக்கும். அதன் பின் 2-வது பகுதியில் தேவைப்படும்போதோ அல்லது ரன்களை நிறுத்துவதற்கான சூழ்நிலை உருவாகும்போதோ அல்லது மற்ற பவுலர் ரன்களை வாரி வழங்கும்போதோ மும்பை அவரை எமர்ஜென்சி லைட்டாக பயன்படுத்துகிறது.

கடந்த போட்டி முடிந்ததும் நான் பும்ராவிடம் பேசினேன். அப்போது வான்கடே மைதானம் பவுலர்களுக்கு போர்க்களம் போன்றது என பும்ரா என்னிடம் சொன்னார். அந்த மைதானத்தில் மும்பை அணியினர் 250 ரன்களை பயிற்சி போட்டிகளில் அசால்டாக சேசிங் செய்கின்றனர். அங்கு 250 ரன்களை சேசிங் செய்வது சாதாரணமானது. எனவே அந்த மைதானத்தைப் பற்றி இதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.


Next Story