கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ 161 ரன்கள் சேர்ப்பு


கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ 161 ரன்கள் சேர்ப்பு
x

கொல்கத்தா வெற்றிபெற லக்னோ 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17வது சீசனில் 28வது லீக் ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, லக்னோ தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குவிண்டன் டிகாக் களமிறங்கினர். டிகாக் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்னிலும், கேப்டன் ராகுல் 39 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அடுத்துவந்த வீரர்கள் அனைவரும் கொல்கத்தா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய நிகோலஸ் பூரன் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 45 ரன்கள் குவித்தார்.

இறுதியில் லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அந்த அணியின் மிச்சேல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், வைபவ், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்க உள்ளது.


Next Story