உலக ஆக்கி லீக்: கனடாவிடம் இந்தியா தோல்வி 6–வது இடம் பெற்றது


உலக ஆக்கி லீக்: கனடாவிடம் இந்தியா தோல்வி 6–வது இடம் பெற்றது
x
தினத்தந்தி 25 Jun 2017 7:18 PM GMT (Updated: 25 Jun 2017 7:18 PM GMT)

உலக ஆக்கி லீக் (அரைஇறுதி சுற்று) தொடர் லண்டனில் நடந்தது. இதில் நேற்று நடந்த 5–6–வது இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தின் தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும்

லண்டன்,

உலக ஆக்கி லீக் (அரைஇறுதி சுற்று) தொடர் லண்டனில் நடந்தது. இதில் நேற்று நடந்த 5–6–வது இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தின் தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும் இந்திய அணி, 11–ம் நிலை அணியான கனடாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் கனடா 3–2 என்ற கோல் கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. கனடா அணியில் கார்டன் ஜான்ஸ்டன் (3 மற்றும் 44–வது நிமிடம்), கீகன் பெரேரா (40–வது நிமிடம்) கோல் போட்டனர்.

இந்திய அணிக்கு கிடைத்த 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் 2–ஐ மட்டுமே கோலாக மாற்றியது. இரு கோல்களையும் ஹர்மன்பிரீத்சிங் (7 மற்றும் 22–வது நிமிடம்) அடித்தார். கணிசமான வாய்ப்புகளை வீணடித்ததால் ஏமாற்றமான முடிவை சந்தித்த இந்தியா 6–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வெற்றியின் மூலம் 5–வது இடத்தை பிடித்த கனடா அணி அடுத்த ஆண்டு புவனேஸ்வரில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது. முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி கனடாவை 3–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது நினைவிருக்கலாம்.


Next Story