கைப்பந்து லீக்: ஆமதாபாத்தை போராடி வென்றது மும்பை


கைப்பந்து லீக்: ஆமதாபாத்தை போராடி வென்றது மும்பை
x

கோப்புப்படம் 

நேற்று நடந்த சூப்பர் 5 சுற்று ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ் - மும்பை மீட்டியார்சை எதிர்கொண்டது.

சென்னை,

3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த சூப்பர் 5 சுற்று ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ் - மும்பை மீட்டியார்சை எதிர்கொண்டது.

திரில்லிங்கான இந்த மோதலில் மும்பை அணி 15-8, 13-15, 7-15, 16-14, 15-13 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை போராடி தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆமதாபாத் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்- டெல்லி டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.


Next Story