சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை


சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை
x

சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோட்டுச்சேரி

காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காரைக்காலில் கால்நடைகளை வளர்ப்போர் அதற்குரிய இடங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும். மாறாக போக்குவரத்து இடையூறாக சாலையில் திரியவிடக் கூடாது. சமீபகாலமாக கால்நடைகள் முக்கிய வீதிகளில் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே எச்சரிக்கையை மீறி சாலைகளில் திரியும் கால்நடைகள் முன்னறிவிப்பின்றி பிடிக்கப்படும். மேலும் நகராட்சி சட்டப்படி கால்நடை வளர்ப்போர் மீது அபராதம் விதிப்பதோடு, சட்டப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story