மீண்டும் செந்நிறமாக மாறிய கடல்


மீண்டும் செந்நிறமாக மாறிய கடல்
x

புதுச்சோியில் மீண்டும் கடல் செந்நிறமாக மாறியதால் சுற்றுலா வந்த பயணிகள், பொதுமக்கள் அதிா்ச்சியைடைந்தனா்.

புதுச்சேரி

புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் செந்நிறமாக காட்சியளித்தது. இதனால் புதுவை கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த மாற்றம் குறித்து கேள்விப்பட்டதும் புதுவை மாசுகட்டுப்பட்டு குழும அதிகாரிகளும், தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தாரும் விரைந்து வந்து கடல்நீரை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகளின் ஆய்வில் கடல் நீரில் வேதிப்பொருட்கள் கலக்கவில்லை என்பது தெரியவந்தது. கடல் நீரில் அமிலம், ஆக்சிஜன் அளவு குறையாமல் இருந்தது. ஆனால் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் வரவில்லை.

இதனிடையே இன்றும் தலைமை செயலகம் முதல் காந்தி சிலை வரையிலான பகுதியில் மீண்டும் லேசாக செந்நிறமாக கடல் நீர் காட்சியளித்தது. இதற்கான காரணம் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு முடிவுக்கு பின்னரே தெரியவரும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story