கார் கண்ணாடி உடைப்பு

வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கார் கண்ணாடி உடைப்பு
Published on

புதுச்சேரி

வில்லியனூர் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 53). இவரது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சம்பவத்தன்று இவரது காரை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com