கர்நாடகத்தில் 10 நாட்கள் அம்பேத்கர் ஜோதி ஊர்வலம்-எஸ்.சி., எஸ்.டி. மாநில தலைவர் தகவல்

பா.ஜனதா தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானது இல்லை என்பதை நிருபிக்க கர்நாடகத்தில் 10 நாட்கள் அம்பேத்கர் ஜோதி ஊர்வலம் நடத்தப்படுகிறது
கர்நாடகத்தில் 10 நாட்கள் அம்பேத்கர் ஜோதி ஊர்வலம்-எஸ்.சி., எஸ்.டி. மாநில தலைவர் தகவல்
Published on

கோலார் தங்கவயல்:

பா.ஜனதா தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானது இல்லை என்பதை நிருபிக்க கர்நாடகத்தில் 10 நாட்கள் அம்பேத்கர் ஜோதி ஊர்வலம் நடத்தப்படுகிறது

பா.ஜனதா கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. மாநில தலைவர் செலவாதி நாராயணசாமி லாரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசு தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக இருக்கிறது. அதை நிருபிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் நவம்பர் 6-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் இரண்டு பிரிவுகளாக அம்பேத்கர் ஜோதி பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் பா.ஜனதா கட்சியின் இந்த பயணத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பரமேஷ்வர் ஆகியோர் தலித் உற்வசம் நடத்த திட்டமிட்டுள்ளது. காங்கிரசாருக்கு தலித் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், நாங்கள் அறிவித்த அம்பேத்கர் ஜோதி ஊர்வலத்திற்கு முன் தலித் உற்சவத்தை அறிவித்திருக்கவேண்டும்.

பா.ஜனதா கட்சியினர் தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரசார் தற்போது தலித் உற்சவத்தை கையில் எடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com