கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி

கூடப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
கோவில் திருப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி
Published on

வில்லியனூர்

ஊசுடு தொகுதி கூடப்பாக்கம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருப்பணிக்காக இந்து அறநிலையத்துறையால் ஒதுக்கப்பட்ட தொகை பல வருடமாக நிலுவையில் இருந்து வந்தது.இந்தநிலையில் அமைச்சர் சாய்.சரவணன்குமாரின் தீவிர முயற்சியால் ரூ.10 லட்சத்திற்கான நிதியை பெற்றார். அதற்கான காசோலையை கோவில் நிர்வாகிகளிடம் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com