

கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், கரியாலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் கல்வராயன்மலையில் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கல்வராயன்மலை அடிவாரம் மட்டப்பாறை கிராம வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை அங்கேயே கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக அதே ஊரைச்சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.