கர்நாடகத்தில் புதிதாக 1,000 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும்- மந்திரி ஹாலப்பா ஆச்சார் பேட்டி

கர்நாடகத்தில் புதிதாக 1,000 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும் என்று மந்திரி ஹாலப்பா ஆச்சார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் புதிதாக 1,000 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும்- மந்திரி ஹாலப்பா ஆச்சார் பேட்டி
Published on

ஹாசன்:

1,000 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

குடும்பம் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் ஹாசனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பின்தங்கிய தாலுகாக்களை தேர்வு செய்து அங்கு அங்கன்வாடி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக கர்நாடகத்தில் 1,000 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும். இந்த மையத்தின் மூலம் கர்ப்பிணிகள், புதிதாக குழந்தை பெற்று கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். குறிப்பாக மலைநாடு பகுதிகளில் உள்ள 5 கிராமங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. சில கிராமங்களில் மதிய உணவிற்கு பதிலாக உணவு தானியங்கள், காய்கறிகள் வழங்கப்படும்.

நடவடிக்கை

ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு முட்டை மற்றும் 150 மி.லி பால் வழங்கப்படும். இவை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும். சில இடங்களில் அங்கன்வாடி பொருட்களில் கலப்படம் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மணல் அள்ளுவதற்கு புதிய மணல் கொள்கையை கொண்டுவரப்படும்.. மணல் கடத்தல் கும்பலுக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com