

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பல்லிகோட்டை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பல்லிகோட்டையை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 30), தூத்துக்குடி மாவட்டம் ராஜாபுதுக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(23) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முத்துராமலிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.