112 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் நேற்று மேலும் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகினார்.
112 பேருக்கு கொரோனா
Published on

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் நேற்று மேலும் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகினார்.

112 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதுபோல் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது. அந்த வகையில் நேற்று தமிழகத்தில் ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒருவர் பலி

இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை இவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 86 ஆயிரத்து 709ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 102 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 281ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,614 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை தற்போது 814ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com