திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 126 மனுக்கள் பெறப்பட்டன

திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 126 மனுக்கள் பெறப்பட்டன.
திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 126 மனுக்கள் பெறப்பட்டன
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 126 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தா சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூஷ்ணகுமார், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com