

புதுச்சேரி
புதுவை சோலைநகரை சேர்ந்தவர் குமாரவேலு. கட்டிட மேஸ்திரி. இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 17). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக்கொண்டுள்ளார். இவர் அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். எப்போது பார்த்தாலும் செல்போனும் கையுமாகவே திரிகிறாய் என அவரது தந்தை குமாரவேலு கண்டித்துள்ளார்.
இதனால் விக்னேஸ்வரன் மனவேதனை அடைந்துள்ளார். நேற்று காலை குமாரவேலு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாடிக்கு சென்ற விக்னேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சோலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.