திருச்சியில் கொரோனாவுக்கு13 பேர் சாவு

திருச்சியில் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியில் கொரோனாவுக்கு13 பேர் சாவு
Published on

திருச்சி,

திருச்சியில் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்தனர்.

புதிதாக 267 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 267 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 66,644 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 3,239 பேர் உள்ளனர். 489 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 62,581 ஆகும்.

13 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற ஆண்கள், பெண்கள் என 13 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழ ந்தோர் எண்ணிக்கை 824 ஆக உயர்ந்தது.

2,378 படுக்கைகள் காலி

திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் வீடு திரும்பி வருவதால், படுக்கைகளும் அதிக அளவில் காலியாக உள்ளன. நேற்றைய தினம் ஆக்சிஜன் படுக்கை கள் 1,088, சாதாரண படுக்கைகள் 1,116, தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 174 என மொத்தம் 2,378 படுக்கைகள் காலியாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com