14 விருதுகள் பெற்று ஆசிரியர்கள் சாதனை

டெல்லியில் நடந்த அகில இந்திய ஆடியோ-வீடியோ போட்டியில் புதுவையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர் 14 விருதுகள் பெற்று சாதனை படைத்தனர்.
14 விருதுகள் பெற்று ஆசிரியர்கள் சாதனை
Published on

புதுச்சேரி

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு, மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் அகில இந்திய ஆடியோ மற்றும் வீடியோ போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு தேசிய அளவில் சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்தாண்டும் போட்டிகள் கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 650 ஆசிரியர்கள் தங்களின் படைப்புகளை அனுப்பி வைத்தனர். இவற்றில் புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் படைப்புகளை சமர்ப்பித்தனர். இதில் 13 ஆசிரியர்கள், ஒரு மாணவரின் படைப்புகள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டன. இதற்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் புதுவையை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு விருது பெற்றனர். விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவரை புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com